tamilnadu

img

இயக்குநர் சுசீந்திரனின் தாயார் காலமானார்....

சென்னை:
இயக்குநர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி நெஞ்சுவலி காரணமாக வெள்ளியன்று (ஜன.15) மரணமடைந்தார். அவருக்கு வயது 62.இயக்குநர் சுசீந்திரனின் தாயார்  ஜெயலட்சுமிக்கு வெள்ளியன்று(ஜன.15) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். சுசீந்திரனின் தாயார் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.இயக்குநர் சுசீந்திரன் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கிப் புகழ் பெற்றவர். சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படம் தேசிய விருது வென்றது. இவரது இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
 

;