tamilnadu

img

டி. ராஜாவின் சகோதரர் கருணாகரன் மறைவு....

சென்னை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில  இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் இளைய சகோதரரும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருமான டி.கருணாகரன் (65) மே 12 அன்று காலமானார்.டி.கருணாகரன் கிராம நிர்வாக அலுவலராக பல கிராமங்களில் பணிபுரிந்து, இறுதியாக திருவண்ணாமலை மாவட்டம் பேரணாம்பட்டு கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர் குடும்பத்தோடு குடியாத்தத்தில் வசித்து வந்தார்.

சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை செய்ததில் இருவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு மருத்து
வர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.அண்மையில் தான் மூத்த சகோதரரையும், சகோதரி ஒருவரையும் இழந்துள்ள டி.ராஜாவிற்கும், அவர்களது குடும்பத்திற்கும் மேலும் ஒரு இழப்பு என்பது ஆற்றுப்படுத்த முடியாத துயரமாகும்.

காலமான டி.கருணாகரனுக்கு வாழ்விணையர் ஜெயந்தி, திருமணமாக பவுத்திரா, கிருத்திகா என இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.கருணாகரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துள்ளது. கருணாகரனின் இறுதி நிகழ்வுகள் பள்ளி கொண்டா அருகில் உள்ள சித்தாத்தூரில்  நடைபெற்றது.

;