இந்தியா கூட்டணி சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வியாழனன்று (ஏப்.4) திருவல்லிக்கேனி ஐஸ் அவுஸ், ஆதாம் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினார். பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், இ.சர்வேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பழனி, எஸ்.பாலசுப்பிரமணியம், தி.ஜெய்சங்கர், திமுக திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் மதன்மோகன், 116 வது வட்ட செயலாளர் விஜி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.