சென்னை, செப். 25 - சிங்காரம் பிள்ளை பள்ளி தொடர் பான ஆவணங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியது. வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளி நிலத்தை சட்ட விரோதமாக விற்று, பள்ளிக் கூடத்தை சேதப்படுத்தி, வணிக வளா கங்களை நடத்துவோர் மீது சட்ட ரீதி யான நடவடிக்கை எடுக்க கோரி சிபிஎம் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறது. இது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரிடம், கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மனு அளித் தார். 2020 நவம்பர் மாதம் நடை பெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க த்தில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். இதனை தொடர்ந்து பல கட்ட போராட் டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி யது. இதன் காரணமாக, கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது வில்லி வாக்கம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திமுக ஆட்சிக்கு வந்ததும், சிங்காரம் பள்ளி நிலத்தை முழுமையாக மீட்டெடுத்து கல்விப் பணிகளுக்கு பயன்படுத்தப் படும் என்று வாக்குறுதி அளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விரிவான விசாரணை மேற்கொண்டு 12 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலை 31ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பனை புதனன்று (செப்.25) சந்தித்து சிபிஎம் மத்தியசென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா மனு உள்ளிட்ட ஆவணங்களை அளித்து பேசினார். அதற்கு பதிலளித்த இயக்கு நர், உயர்நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை மேற்கொள்ளும் பொழுது மேற்கண்ட ஆவணங்களை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வின்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், வில்லிவாக்கம் பகுதி செயலாளர் எம்.ஆர்.மதியழகன், மாவட்ட குழு உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி எம்.சி ஆகியோர் உடனிருந்தனர்.