tamilnadu

img

சிபிஎம் கோவை மதுக்கரை ஒன்றிய செயலாளர் தோழர் பி. ரவிச்சந்திரன் மறைவு.... சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்....

சென்னை;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல்செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு உறுப்பினரும், மதுக்கரை ஒன்றியக்குழு செயலாளருமான தோழர் பி. ரவிச்சந்திரன் (58) உடல்நலக்குறைவால் திங்களன்று உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவருடைய மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.தோழர் பி. ரவிச்சந்திரன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். இன்ஜினியரிங் தொழிலாளர்களின் நலன் மற்றும்  உழைக்கும் தொழிலாளர்களின் நலன்களுக்கான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். தற்போது கட்சியின் மதுக்கரை ஒன்றிய செயலாளராக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த தோழர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும்.அவரது மறைவால் வாடும் அன்னாரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், தோழர்கள் அனைவருக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறது.

;