tamilnadu

img

கொரோனா அடுத்த கட்ட நடவடிக்கை: ஜன.29ல் முதல்வர் ஆலோசனை....

சென்னை:
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர் களுடன் தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது.கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழ் நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகள் படிப்படியாக அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாவட்டங்களில் கொரோனா நிலவரம் குறித்தும், அங்கு எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலர் சண்முகம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், குடியரசு தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப் படுகிறது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒவ்வொரு மாதமும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்க ளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்பிறகு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

;