tamilnadu

img

கொரோனா முழு ஊரடங்கினால் பாதிப்பு.... முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக..... தமிழக முதல்வருக்கு சிஐடியு வேண்டுகோள்......

சென்னை:
கொரோனா முழு ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள முறைசாராதொழிலாளர்களின் வாழ்வாதார த்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு சிஐடியு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப்பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:கொரோனா இரண்டாம் அலையில் தொற்று வேகமாக பரவி வரும்நிலையில், தமிழக மக்களை பாதுகாத்திட தமிழக  முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக் குரியது. பொதுமக்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மேமாதம் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக நிவாரணத்தொகை வழங்குவதை சிஐடியுவரவேற்கிறது. அதே நேரத்தில்வேலையில்லாமல் வருமானத்தைஇழந்துள்ள முறைசாரா  தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கையில்  95 சதமானம் பேர் முறைசாரா தொழிலாளர்கள். இவர்களில் கட்டுமானம், தையல், சுமைப்பணி, நடைபாதை வியாபாரம்,ஆட்டோ, வேன், டாக்சி, டெம்போ, சரக்கு வாகனத்தொழில்கள் உள்ளடங்கி அமைப்புசாரா ஓட்டுநர்கள்  என 17 தொழில் வாரியான முறைசாரா தொழிலாளர்  நலவாரியங்கள் தமிழக அரசின் தொழிலாளர்துறையின் செயல்பட்டு வருகின்றன. இதில் கட்டுமான நல வாரியத்தில்  சுமார் 30 லட்சம் தொழிலாளர்களும், உடலுழைப்பு மற்றும் இதர தொழில் வாரி நல வாரியங்களில் சுமார் 43 லட்சம் தொழிலாளர்களும் என 73 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நலவாரியங்களில் பதிவு செய்துள் ளனர்.தமிழக முதல்வர்  அறிவித்துள்ளகொரோனா முழு ஊரடங்கினால்  மே மாதம் 24 ஆம் தேதி வரை முறைசாரா தொழிலாளர்கள் எவ்வித வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட முதலாம் கொரோனா அலையின் போது பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது முறைசாரா தொழிலாளருக்கு நல வாரியங்கள் மூலமாக நிவாரண உதவி நிதியும் நிவாரண பொருட்களுக்கும் வழங்கப்பட்டன.அது போன்று இரண்டாம் கொரோனா அலையின் போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நல வாரியங்களில் பதிவு செய்துள்ள அனைத்து முறைசாரா தொழிலாளருக்கும் நிவாரண உதவித்தொகை யும் நிவாரணப் பொருட்களும் வழங்க உரிய நடவடிக்கையினை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று சிஐடியு தமிழ்நாடுமாநிலக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.   இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;