tamilnadu

img

2 வார ஊரடங்கில் 100 நாள் வேலைக்கு தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும்.... கே.எஸ்.அழகிரி கோரிக்கை.....

சென்னை:
ஊரடங்கு அமல்படுத் தப்படும் அதே நேரத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பாதிக்கா வண்ணம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை பொது ஊரடங்கு காரணமாகத் தொடங்க முடியாத நிலையில் அதில் பணியாற்றுகிற தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து ஊதியத்தை வழங்க வேண் டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக கடந்த 10 நாட்களில் நாடு முழுவதும் 36,110 பேர் பலியாகியிருக்கிறார்கள்.இந்நிலையில் பொது ஊரடங்கு மட்டுமே இன்றைய கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் யதார்த்த கள நிலவரத்தை அறிந்து வருகிற 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பொது ஊரடங்கை அறிவித்திருக்கிறார்.சரியான நேரத்தில், சரி யான முடிவை முதல்வர்  எடுத்திருக்கிறார். கடுமையான பொது ஊரடங்கைக் கடைப்பிடிப்பதன் மூலமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கிராமப்புறத்தில் வாழ் கிற ஏழை, எளிய மக்களுக்கு வறுமையிலிருந்து விடுபடவும், வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் செயல் பட்டு வருகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை பொது ஊரடங்கு காரணமாகத் தொடங்க முடியாத நிலையில் அதில் பணியாற்றுகிற தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து ஊதியத்தை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.சென்னை மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் நேற்று அறிவிக்கப்பட்டு, இன் றைக்கே நடைமுறைக்கு வந்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. அதேநேரத்தில் மகளிருக்கு வழங்கப்படுகிற சலுகைகள், திருநங்கைகளுக்கும் அவசியம் வழங்கப்பட வேண்டும். எனவே, பொது ஊரடங்கினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படலாம்.ஆனால், கொரோனாபாதிப்பிலிருந்து மக்களின் உயிரைப் பாதுகாக்கவேண்டிய மிகப் பெரியபொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து எடுக்கப்பட்ட பொது ஊரடங்கு நடவடிக்கையைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்”.இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

;