tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவு நாள்...

தோழர் ஜே.ஹேமச்சந்திரன் மிகச் சிறந்ததொழிற்சங்கவாதியாகத் திகழ்ந்தவர். இந்தியத்தொழிற்சங்க மையத்தில் பல்வேறு பொறுப்புகளில்திறம்படப் பணியாற்றியவர்.

தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் முன்னணித் தலைவராகத் திகழ்ந்தார். 1980, 1984, 1989 மற்றும் 2001 இல் திருவட்டாறு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் சிபிஐ (எம்) குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.திருவனந்தபுரத்தில் அவரது கல்லூரிப் படிப்புகளின்போதேஅரசியலில் தீவிரமாக இருந்தார். 1952 இல் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார்.  1962 ஆம் ஆண்டில் நாகர்கோவிலில் கட்சியின் முழுநேர ஊழியர் ஆனார்.தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோது ஜே.ஹேமச்சந்திரன் அதில் தம்மை இணைத்துக் கொண்டார்.

இந்திய தொழிற்சங்க மையம் அமைக்கப்பட்டபோது, அவர்மாநிலத்தில் ஒரு முன்னணித் தலைவராகத் திகழ்ந்தார். அவர் தேயிலை, ஜவுளி,தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி தொழிலாளர் போராட்டங்களை வழிநடத்தியவர். அவர் கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் மற்றும் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து திறம்படப் பணியாற்றினார். அனைத்து இந்திய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் ஆனார்.1978 ஆம் ஆண்டு சிபிஐ (எம்) தமிழ்நாடுமாநிலக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 களில் அவர் சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேசிய ரப்பர் வாரிய உறுப்பினராகவும் செயல்பட்டார்.தமிழ்நாட்டில் கோகோ கோலா மற்றும் பெப்சி விற்பனை மீதான தடைக்காக போராடினார். மேலும் 2004 ஆம் ஆண்டுசுனாமிக்குப் பிறகு, ஜே.ஹேமச்சந்திரன் மாநிலத்தில் ஒருங்கிணைந்த நிவாரணப் பணிக்காக பிரச்சாரம் செய்தார்.2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள் திருவனந்த
புரம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு காலமானார்.

பெரணமல்லூர் சேகரன்

;