tamilnadu

12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு... ஹால் டிக்கெட் வெளியீடு....

சென்னை:
12ஆம் வகுப்புத் துணைத் தேர் வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக் கான ஹால் டிக்கெட் வெளியிடப் பட்டது.தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் 6 ஆம் தேதி மொழிப் பாடமும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆங்கிலப் பாடமும் அடுத்தடுத்த நாட்களில் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

மே 2021-ல் 12 ஆம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித் தேர்வர்கள் இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப் பித்துள்ளனர். அதேபோல 2020- 2021ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு 19.07.2021 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள், துணைத் தேர்வினை எழுத விண் ணப்பித்துள்ளனர். எனினும், மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுத வேண்டும். அத்தேர்வர்கள், குறிப்பிட்ட பாடத் தேர்வுகளை மட்டும் எழுத இயலாது.இந்நிலையில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு எழுத ஹால் டிக்கெட் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப் படும் மதிப்பெண்களே இறுதியானது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;