tamilnadu

சீன விண்வெளி நிலையம் உலகிற்கு நலன் தர வேண்டும் சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து

பெய்ஜிங், செப்.18- மனிதரை ஏற்றிச்சென்ற ஷென்சோ-12 விண்கலம் செப்டம்பர் 17ஆம் நாள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக தரை இறங்கியது. இப்பயணத்துக்குப் பொறுப்பேற்ற நியே ஹைஷேங், லியூ போமிங், தாங் ஹோங்போ ஆகியோர் தங்குதடை யின்றி கலத்திலிருந்து வெளியேறினர். அவர்களது உடல் நிலை சிறப்பாக உள்ளது. இந்த விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதை அடுத்து மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளி நிலையக் கட்டத்தின் முதல் பறத்தல் கடமை யை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக விண்வெளித் திட்டப்பணி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ச்சோ லீ ச்சியேன் அன்றைய தினம் செய்தி யாளர்களிடம் கூறுகையில், சீன விண்வெளி நிலையம், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நலன் தரும் வகை யில், சீனா தொடர்ந்து இத்துறையில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற ஆழத்தின் அளவு ஆகியவற்றை விரி வாக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில், ஷென்சோ-13 விண்கலம் தயாராக வுள்ளதாகவும், இவ்விண்கலம் அக்டோபர் மாதம்  விண் ணில் செலுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

;