tamilnadu

img

“இனி தமிழகம் வெல்லும்” முதலமைச்சர் டுவிட்டர் பக்கத்தில் மாற்றம்....

சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சராக பதவி யேற்ற பின், மு.க.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் “தமிழ்நாடு முதலமைச்சர்” என பெயர் மாற்றம் செய்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் முதல மைச்சராக பதவிப்பிரமாணம் பெற்ற சில நொடிகளில், தனது டுவிட்டர் பக்கத்தின் பயோவில், “தமிழ்நாடு முதலமைச்சர்” என்றும், முகப்பு படத்தில், ’இனித் தமிழகம்வெல்லும்’ என்றும் வார்த்தை அடங்கியபுகைப்படமும் புதிதாக சேர்க்கப்பட் டுள்ளது.அவரின் டுவிட்டர் பக்கத்தின் பெயருக்குகீழ் உள்ள சுயவிவர குறிப்பில்,” தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர், நான் திராவிடன்” எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மு.க.ஸ்டாலினின் டுவிட்டர் பக்கத்தை 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

;