tamilnadu

img

கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்று  மற்றும் வெப்ப சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் சேலம், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 1 வரை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

;