tamilnadu

img

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு வருமாறு:-தென்மேற்கு பருவகாற்றின் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்தது.எஞ்சிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில்  லேசானது முதல் மிதமான மழையும் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்தது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை கன மழை பெய்யக்கூடும். எஞ்சிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென் காசி மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் லேசான மழையும் பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.சென்னையைப் பொறுத்தவரை  பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;