கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை வரை மன்னார் வளைகுடா, மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும், ஜூன் 18 வரை கேரளம், கர்நாடகம், கடல் பகுதிகளிலும், ஜூன் 19 வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.