tamilnadu

துரைமுருகன் வெற்றியை எதிர்த்து வழக்கு....

சென்னை:
காட்பாடி தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய் யப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை காட்டிலும் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதிமுக வேட்பாளர் வி.ராமு, 745 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.அவர் தன் மனுவில், தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும், தேர்தல் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற் றப்படவில்லை எனவும், தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும், மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

அதேபோல, தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு  வெற்றி வாய்ப்பை இழந்த செல்வமோகன்தாஸ் பாண்டியன் சார்பிலும் தேர்தல் வழக்குத் தொடரப் பட்டுள்ளது.அவர் தன் மனுவில், தேர்தல் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனவும், பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், குறிப்பாக, தபால் வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்எதிர்த்தரப்பு பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவித்து, தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என இருவரும் கோரியுள்ளனர்இந்த இரு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;