tamilnadu

img

11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான தேர்வு ரத்து.... தமிழக அரசு அறிவிப்பு...

சென்னை:
பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக புதனன்று மாலை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் தேர்வு நடத்தி 11 வகுப்புமாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.பதினோராம் வகுப்பு மாணவர்சேர்க்கைக்காக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்த நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசும் முதலமைச்சரும் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.மேலும் ஒரே பாடப் பிரிவில் அதிக விண்ணப்பம் வந்தால் ஒன்பதாம் வகுப்புமதிப்பெண்ணை  அடிப்படையாகக் கொண்டு பாடப்பிரிவு ஒதுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கே.பாலகிருஷ்ணன் கடிதம்
முன்னதாக இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் ஜூன் 9 புதன்கிழமை காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கடிதம் எழுதியிருந்தார்.அக்கடிதத்தில் அவர் கூறியிருந்த அம்சங்கள் வருமாறு:

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வி ஆணையர்  செயல்முறையில், பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் குறிப்பிட்டபாடப் பிரிவிற்குச் சேர்க்கைக்கான இடங்களை விட மிக அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்றால், அந்த பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தொடர்புடைய கீழ்நிலைப் பாடத்தில் இருந்து 50 வினாக்கள் தயார் செய்துதேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதனால் ஏழை, எளிய கிராமப்புறம் உள்ளிட்டு அனைத்துத் தரப்பு மாணவர்கள் மத்தியிலும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியிலும்  பெரிதும் கவலை ஏற்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கொரோனா பரவல் சூழலை கருத்தில்கொண்டு 9, 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் பொதுத்தேர்வுகள் ரத்து  செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ்-1 வகுப்புகளுக்கு  பாடப்பிரிவுகளை  தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துவது பல மாணவர்களது வாய்ப்பை தட்டிப் பறித்துவிடும். எனவே  அரசுப் பள்ளிகளில் விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களு க்கும்  கூடுதல் வகுப்புகளை    திறந்து அவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்,

$    பிளஸ் - 1 வகுப்பிற்கு தேர்வு என்ற பள்ளிக்கல்வி ஆணையரின் உத்தரவை மாற்றியமைத்திட வேண்டும். 

$    சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு, அதே பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்தமாணவர்கள் விரும்பும் பாடப்பிரி வில் சேர்க்கப்பட வேண்டும்.

$   பள்ளியின் அருகில் வசிப்பவர்கள் கோரும் பாடப்பிரிவை மறுக்காமல் வழங்கிட வேண்டும்.

$  மிக அதிக அளவில் விண்ணப்பம்வரப்பெற்றால் கூடுதல் வகுப்புகள் தொடங்கி விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வியை தொடரவாய்ப்புகள் ஏற்படுத்தித்தர வேண்டும்.

ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வியின் நலனை கருத்தில்கொண்டு மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;