tamilnadu

img

சிறந்த பண்பாளர் பேரவைத் தலைவர்... சட்டமன்ற கட்சி தலைவர்கள் வாழ்த்து.....

சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக பிச்சாண்டி இருவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்தொடர்ந்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர்.அவை முன்னவர் துரைமுருகன், “அரசியல் போராளி, எதற் கும் அஞ்சாமல், சளைக்காமல் நீதிகேட்டு நெடுந்தூரம் பயணம் செய்தும், எதிர்நீச்சல் போட்டு பழக்கப்பட்ட தாங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள்.

அமைச்சர்கள் எத்தனை பேர் இருந்தாலும் கூட சபாநாயகர், முதலமைச்சர் பெயர் மட்டும் தான் பேரவையின் பலகையில் இருக்கும். எனவே அனைவரது அன்பையும் பெற வேண்டும் என்றார்.அடுத்ததாக வாழ்த்திய எதிர் கட்சி தலைவர் பழனிசாமி, “பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ள கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டாலும் சபாநாயகர் அனைவருக்கும் பொதுவானவர்.  ஆசிரியராக சபாநாயகர் பணியாற்றியுள்ளதால் ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றான சட்டமன்றத்தின் மரபு
களை காப்பாற்றி அனைவரையும் சமமாக நடந்த வேண்டும் என்றார்.

நாகை மாலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  உறுப்பினரான நாகை மாலி பேசுகையில், “வரலாற்று சிறப்புமிக்க இந்த பேரவையின் தலைவராகவும் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.அரசியல் வாழ்க்கையிலும் சட்டமன்றத்திலும் நீண்ட நெடிய அனுபவங்களையும் படிப்பினைகளையும் கற்றறிந்தவர்கள் நீங்கள் அந்த வகையில் அவர்களை 
எல்லோரும் பாராட்டும் வகையில் வழி நடத்திச் செல்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

எங்களைப் போன்ற சிறிய கட்சி உறுப்பினர்களின் கருத்துக் களை அவையில் முழுமையாக பதிவு செய்ய போதிய நேரத்தை ஒதுக்கி தர வேண்டுமென்றும் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.காங்கிரஸ் கட்சி சார்பில் உரையாற்றிய பிரின்ஸ், “தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த தலைவர் பதவியில் சிறப்பாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டிக் காக்க ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும்”என்றார்.பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, “பேரவைத் தலைவர் பதவி என்பது சாதாரண பதவி அல்ல அந்த இருக்கைக்கும் பதவிக்கும் அழகு சேர்ப்பது வரலாற்றில் இடம் பிடிப்பது முக்கிய கடமையாகும் ஆகவே அந்தக் கடமையை நிறைவேற்ற நடுநிலையோடு செயல்பட வேண்டும்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனைச்செல்வன் பேசுகையில், “ஜனநாயக மரபுகளை பாதுகாக்கவேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது நமது தேசம். இத்தருணத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க சட்டமன்றமாண்புளை போற்றிப் பாதுகாத்திட தங்கள் பணி சிறப்பாகஅமைந்திட வாழ்த்துகிறேன்”என்றார்.மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராமச் சந்திரன், ஜவாஹிருல்லா, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், வேல்முருகன், உள்ளிட்டோரும் வாழ்த்தி பேசினர்.

;