ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக் கூடிய நிபந்தனை விதிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்ற வழக்குகளில் கைதானவர்கள் ஜாமீன் கிடைத்தும் பிணைத் தொகை செலுத்த முடியாத காரணத்தால் சிறையிலேயே இருப்பதாக செய்தி வெளியான நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, விசாரணையை தொடங்கியது. அப்போது, குற்ற வழக்குகளில் கைதானவர்கள் 104 பேர் ஜாமீன் கிடைத்தும் பிணைத் தொகை செலுத்த முடியாததால் சிறையிலேயே இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக் கூடிய நிபந்தனை விதிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்குவதில் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்தது.