tamilnadu

img

பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருது

பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருது

கிருஷ்ணகிரி, மே 20 - பெங்களூரு குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு என்ற அமைப்பின் சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த வர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாணவர்க ளுக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக இலவச மாக ஊக்க பயிற்சி அளித்து வரும் முதல்வர் ராதாகிருஷ்ணன், சவுதி அரேபியாவில் இந்திய மாணவர்கள் முன்னேற்றத்திற்கு இலவசமாக ஊக்கப் பயிற்சி அளித்து வரும் தமிழகத்தை சேர்ந்த யுனிவர்சல் நிறுவனத்தின் தலைவர் பத்ருதீன் அப்துல் மஜீத், 70 வயதிலும் ஏழை மாணவர்களின் கல்விக்காக 35 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த கட்டணத்தில் ஓசூர் எம்எம் நகர் பகுதியில் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் நடத்தி வரும்  தாளாளர் தெரசா ஜேம்ஸ்,ஆப்பிரிக்க கண்டத்தில் தான்சானியாவில் தனியார் நிறுவனத்தில் பெண்கள் மேம்பாட்டு தலைவராக உள்ள கோவையைச் சேர்ந்த முனைவர் லட்சுமி பிரியா மோகன், வறுமையில் உள்ள பெண்கள்,மற்றும் வன்கொடுமை குற்றங்க ளில்  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திட இலவசமாக வழக்கு நடத்தி வரும் மதுரை உயர்நீதிமன்ற இளம் வழக்கறிஞர் முஸ்ஃபிரா பர்வீன் ஆகி யோருக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.