பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் உலக திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக மதிப்புமிக்க Pierre Angenieux Excellens in Cinematography விருது வழங்கப்பட்டது. அவரது சாதனையைப் பாராட்டி, விருகம்பாக்கம் அவிச்சி கலை அறிவியல் கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரகரா ஏவிஎம் மாஸ்டர் விருதினை ஏவிஎம் தயாரிப்பு நிறுவன மேலாண் இயக்குநர் கே.சண்முகம் முன்னிலையில் வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் என்.பூமா, விஸ்காம் துறைத் தலைவர் ஜி.அபிநயா, ஒளிப்பதிவாளரும் எழுத்தாளருமான சி.ஜே.ராஜ்குமார், தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க இணைச் செயலர் செவிலோ ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.