tamilnadu

img

வண்டலூர் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிங்கம் பலி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிங்கம் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில்  கடந்த மே 26-ஆம் தேதி, பூங்காவின் சஃபாரி பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் 5 சிங்கங்களுக்கு பசியின்மை சளி உள்ளிட்ட உபாதைகள்  ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த கால்நடை மருத்துவக் குழுவினா், சிங்கங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அங்கிருந்த 11 சிங்கங்களின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தானுவாஸ் மற்றும் போபாலில் உள்ள உயா்பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்துக்கு அனுப்பி  சோதனை செய்யப்பட்டது. அதில் 9 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து அனைத்து சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 
ஆனால்  சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரம் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இந்நிலையில், இன்று மேலும் ஒரு ஆண் சிங்கம் பலியாகியுள்ளது.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற சிங்கங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

;