tamilnadu

img

பொழுதுபோக்கு அம்சங்களோடு  விளையாட்டு சுற்றுலா திட்டம்

 சென்னை, ஜூலை 16- வெளிநாடுகளில் உள்ள தைப்போல் விளையாட்டு சுற்றுலாத்திட்டம் இந்தியாவில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்ப்பதோடு கிரிக்கெட் விளையாடி மகிழ்வதும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்போர்ட்ஸ் எக்ஸோடிகா கிரிக்கெட் விளையாட்டையும் பொழுதுபோக்கு அனுபவத்தையும் ஒருங்கிணைக்கிறது. இதன் ஒருபகுதியாக கிரிக்கெட் லெஷர் லீக் தொடங்கப்பட்டுள்ளது.  கேரள மாநில அரசின் சுற்றுலாத்துறை ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் மலைபிரதேச ஓய்வில்லங்கள், வனவிலங்குகளை காண்பதற்கான சவாரி, உப்பங்கழிகளில் படகு பயணங்கள் ஆகியவற்றோடு சேர்த்து அற்புதமான விளையாட்டு அனுபவத்தை உங்களுக்கு அளிக்கும். இதனை கேரள மாநில கிரிகெட் அணிக்கு பயிற்சியாளராக தற்போது செயல்படும் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டேவ் வாட்மோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார். தனிநபரோ அல்லதுகுழுவினரோ வியக்கவைக்கும் போழுதுபோக்கோடு விளையாட்டிலும் பங்கேற்று பசுமையான நினைவுகளை தங்கள் மனதில் கொண்டு செல்ல முடியும் என்று ஸ்போர்ட்ஸ் எக்ஸோடிகா இயக்குநர் சஞ்சு சாமுவேல் தெரிவித்தார்.