tamilnadu

img

 ஐ.சி.எப். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு  ஆர்ப்பாட்டம்....  

ஒன்றிய அரசு 41 ராணுவ தளவாட தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷனாக்கும் முயற்சியை கண்டித்தும், ஐசிஎப், ரயில்வே, பாதுகாப்பு துறை, எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்தும் ஐ.சி.எப். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஐசிஎப் பொது மேலாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் ப.ராஜாராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோகன்தாஸ் (ஏஐஆர்எப்), ராஜேந்திரன் (ஏஐடியுசி), வ.முரளிதரன் (தொமுச), தினேஷ்குமார் (அண்ணா தொழிற்சங்கம்), செந்தில்குமார் (என்.எப்.ஐ.ஆர்), கார்த்திக் (ஏஐஆர்எப் ஐஎஸ்சி), சாந்தகுமார் (எஸ்சி, எஸ்டி), மங்காராமன் (எஸ்சி, எஸ்டி), ராஜேஷ் (மினிஸ்டிரியல் ஸ்டாப் அசோசியேஷன்) ஆகியோர் பேசினர்.

;