tamilnadu

img

நடிகர் விவேக் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

நடிகர் விவேக் உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. 
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59. மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். 
இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில் அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடலுக்கு குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்தனர். இதையடுத்து அவரது உடல் 6.10 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. 
 

;