tamilnadu

சாதியை தெரிந்து கொள்ள வேண்டாம்: மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அட்வைஸ்

விழுப்புரம், ஜன. 21- சாதி என்பதே கிடையாது, மாண வர்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டாம் என நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.  விழுப்புரத்தில் தனியார் பள்ளி  ஆண்டு விழா ஒன்றில் நகைச்சுவை நடிகர் சதீஷ் சனிக்கிழமை கலந்து கொண்டார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

அப்போது பேசிய நடிகர் சதீஷ், பள்ளி வாழ்க்கை என்பது மீண்டும் வாழ்க்கையில் கிடைக்காத ஒன்று. அந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர்கள் வீட்டிலேயே கிடைப் பார்கள். எதிரிகள் எங்கு வேண்டு மானாலும் கிடைப்பார்கள். உண்மை யான நட்பு என்பது பள்ளிக் கூட வாழ்க்கையில் தான் கிடைக்கும்.

பள்ளி கூட வாழ்க்கையில் நண்பர் கள் பெயர்கள், தொலைபேசி எண்கள் தெரிந்து கொள்ள விருப்பப் படும் நாம் நண்பர்களின் சாதியை  தெரிந்து கொள்ள விரும்புவ தில்லை. சாதி என்பதே கிடையாது. எனவே  மாணவர்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டு கோள் விடுத்தார்.