tamilnadu

img

நடிகர் சங்க தேர்தல் நிறைவு

சென்னை, ஜூன் 23- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், கமல் ஹாசன், விஜய் உள்ளிட்ட ஏராளமான திரைக் கலை ஞர்கள் வாக்களித்தனர். தபால் வாக்கு படிவம் சென்று சேராததால் மும்பையிலுள்ள ரஜினிகாந்த் வாக்களிக்க வில்லை. விஷால் தலைமையி லான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமை யிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதும் நடிகர் சங்கத் தேர்தல், மயிலாப்பூ ரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் ஞாயிறன்று நடந்தது. 3171 பேர் வாக்களிக்கும் இந்த தேர்தலை முன்னிட்டு இணை ஆணையர் தலைமை யில் 400 காவலர்கள் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யதும், திரையுலக மற்றும் நாடக நட்சத்திரங்கள் தங்க ளது வாக்குகளை செலுத்தி னர். தேர்தல் 5 மணிக்கு நிறைவு பெற்றதை ஒட்டி, வாக்குப் பெட்டிகள், சீல் வைக்கப்பட்டன. நுங்கம்பாக் கத்தில் உள்ள சவுத் இந்தி யன் வங்கி லாக்கருக்கு அவை பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. உயர்நீதி மன்ற உத்தரவுக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை நடை பெறும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

;