tamilnadu

img

தள்ளுபடி விலையில் ஆவின் நெய்!

சென்னை, ஆக. 12- ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவை களை பூர்த்தி செய்யும் வகையில் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள் ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களை, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்க ளுக்கு விற்பனை செய்து வருகிறது.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்க ளின் வசதிக்காக பால் உபபொருள்களின் விலைகளில் அவ்வப்போது சிறப்புத் தள்ளுபடி செய்வது வழக்கம். அந்த வகையில், கிருஷ்ண ஜெயந்தி (ஆக. 26), விநாயகர் சதுர்த்தி (செப். 7) உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. அதன்படி, ரூ. 85க்கு விற்பனை யான ஆவின் 100 மி.லி. நெய் விலை ரூ. 75 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி செப்டம்பர் 15 வரை அமலில் இருக்கும் என ஆவின் நிறுவனம் கூறியுள்ளது.