tamilnadu

img

தொழிலாளர் வர்க்க கோரிக்கைகளை முன்வைத்து ஜன.19-25 ஒரு வாரம் பிரச்சாரம்! சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் அறிவிப்பு

தொழிலாளர் வர்க்க கோரிக்கைகளை முன்வைத்து ஜன.19-25 ஒரு வாரம் பிரச்சாரம்! சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் அறிவிப்பு

சிஐடியு தமிழ்நாடு மாநில 16ஆவது மாநாட்டில் பணியாற்றிய இளம் செந்தொண்டர்களை சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர்கள் ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பொதுக்கூட்டம் உள்ளிட்ட  மாநாட்டின் நிகழ்வுகளில் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர், நவ. 10 -  சிஐடியு மாநில மாநாட்டு முடிவின் படி, தமிழகத்தில், அனைத்துப் பகுதி தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வா தாரக் கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 19 முதல் 25 வரை ஒருவார காலம் பிரச்சார இயக்கம் நடத்தப்படும் என்று மாநில பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் அறிவித்தார். சிஐடியு மாநில மாநாட்டில் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப் பட்டிருக்கும் எஸ். கண்ணன், மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக தொழிலாளி வர்க்கம் வேகத்தோடு உத்வேத்தோடு செயல்பட வேண்டும் என்பதற்காக இம்மாநாடு நடைபெற்றிருக்கிறது.  ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது  என்று சொன்னால், தொழிலாளி வர்க்கம்  நியாயமான கூலி, உரிமைகளை பேரம் பேசி பெறும் உரிமை இருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ‘சாம்சங்’, ‘யமஹா’, மின்வாரியம், போக்குவரத்து, அங்கன்வாடி, மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு பகுதி தொழிலாளர் வர்க்கம் நடத்திய போராட்டங்களை தமிழகம் பார்த்து இருக்கிறது. சிஐடியு என்ற செங்கொடி இயக்கத்தின் தலைமையில் தான் இந்த உரிமைப் போராட்டங்கள் நடைபெற்றன. எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் தீவிர திருத்தத்தை கைவிட வேண்டும், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 53 தீர்மானங்கள் சிஐடியு மாநில மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ளன.  இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்ததால் தமிழ்நாட்டில் ஜவுளி, சிறுகுறு தொழில் கள், இறால், மருந்து ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்களில் வேலை செய்யும் 20 லட்சம்  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்ச னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். அதே சமயம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தொடர்ந்து அவமரியாதை செய்வதற்கும் பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை, தமிழக முதல்வர் கடிதத்திற்கும் அவர் பதில் சொல்லவில்லை. தொழிலாளர்கள் உரிமைப் பாதுகாப்பு, கொங்கு மண்டல  சிறு-குறு தொழில்கள் பாதுகாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி யுள்ளோம்.  ஜனவரி 19 திருமெய்ஞானம் தியாகி கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் நினைவு தினத்தில் தொடங்கி 25ஆம் தேதி வரை சுமார் ஒரு வார காலம் தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமம் என பட்டி தொட்டிகள் முழுவதும் தொழி லாளர்களிடம் பிரச்சாரம் செய்து, குறிப்பிட்ட நாளில் மறியல் போராட்ட களம்  கண்டு வெற்றி பெறுவது என்று சிஐடியு மாநில மாநாடு முடிவு செய்துள்ளது.  அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம். இவ்வாறு எஸ். கண்ணன் கூறினார்.