tamilnadu

img

9, 10, 11 மாணவர்கள் முழு தேர்ச்சி... சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு....

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் முதல்அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. நோய்த்தொற்றின் பரவல் காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியவில்லை. இதனால், அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2020-21 ஆம் கல்வியாண்டிலும் பள்ளிகள் குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் திறக்க முடியவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் திறக்கப்பட்டன. குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திலும், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்த நிலையில் தமிழகத்தில் பொது தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை மாணவர்களும் பள்ளிகளும் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். இது குறித்து இறுதி முடிவை தமிழக முதல்வர் தான் எடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் கூறிவந்தார். 

 இது தொடர்பான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழக சட்ட

தொடர்ச்சி 3ம் பக்கம்

;