tamilnadu

img

80 வயது வாக்காளர்கள் 12.91லட்சம் பேர்...  தேர்தல் அதிகாரி தகவல்...

சென்னை:
தமிழகத்தில் 80 வயதுக்குமேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,  “ தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சத்து74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண் வாக்காளர்கள் 3,08,38,473; பெண் வாக்காளர்கள் 3,18,28,727 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,08,718 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8,253 வாக்காளர்களும் உள்ளனர் என்று தெரி வித்தார்.

;