tamilnadu

img

முதல்வரின் செயலாளர்களாக உதயசந்திரன் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

உதயச்சந்திரன், உமாநாத் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வராக ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முதல்வர் பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்று முதல் கையெழுத்தாக 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நால்வர் நியமனத்துக்கான உத்தரவை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.

;