tamilnadu

img

10 இடங்கள் கூட நிரம்பாத 30 பொறியியல் கல்லூரிகள்!

நடப்பு கல்வியாண்டில் 30 பொறியியல் கல்லூரிகளில்  10 இடங்களுக்கும் குறைவாகவே  நிரம்பி உள்ளதாக கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொறியில் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 17 பொறியியல் கல்லூரிகளில் 100 விழுக்காடு இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 74 கல்லூரிகளில் 95 விழுக்காடுக்கும் அதிகமான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பி உள்ளன. அதேசமயம் 48 கல்லூரிகளில் 10 விழுக்காட்டுக்கும் குறைவான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் 30 கல்லூரிகளில் 10க்கும் குறைவான இடங்களே நிரம்பி உள்ளன. மேலும் 3 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்தள்ளது. 

;