tamilnadu

3 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனா... அமைச்சர் தகவல்...

சென்னை:
தமிழகத்தில் மேலும் இருவருக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். உருமாறிய கொரோனா வைரஸ் வகை
களில் ஒன்றான ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரோனா வைரஸில் இருந்து உருமாறிய ‘டெல்டா’ கொரோனா வைரஸின் உருமாறிய வடிவமாகும். 

இதில் தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 1,100க்கும் மேற்பட்டோரின் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டதில் மேலும் இருவருக்கு ‘டெல்டா பிளஸ்’ தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத் தில் மொத்தம் 3 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட் டுள்ளது. சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு ஆய்வகத்துக்கு மாதிரிகள்  அனுப்பி பரிசோதனை முடிவுகள் வரத் தாமதமாவதால் விரைவில் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு, மையம் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். 

;