tamilnadu

img

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

அறந்தாங்கி, அக்.21-  புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே  கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவ மக்கள் இரண்டா வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மண மேல்குடி ஒன்றியம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து 118 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க அக்டோபர் 18ம் தேதி சென்றனர்.  இதில் சுரேஷ் என்பவருக்கு சொந்த மான விசைப் படகில்  சேவியர், சுகந்தன், ராஜ்கிரண் ஆகிய 3 மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படை யினர் கோட்டைப்பட்டினம் விசைப் படகை மோதியதில் 3 மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில் சேவியர், சுகந்தன் இருவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  இதில் ராஜ்கிரண் என்பவர் மட்டும் மாயமான நிலையில் சடலமாக மீட்கப் பட்டுள்ளார். அவரது உடலை இலங்கை அரசு தமிழக அரசிடம் இதுவரை ஒப்படைக்காத நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  உண்ணாவிரத போராட்டத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், இராமநாத புரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் மற்றும் இறந்த மீனவர் ராஜ்கிரண் தந்தை  ராசு, தாயார் ஆரவல்லி, ராஜ்கிரண் மனைவி பிருந்தா உள்ளிட்டோர் உண்ணா விரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

;