tamilnadu

img

6வது மெகா முகாமில் 23.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை, அக். 24- தமிழகத்தில் 6வது மெகாமுகாமில் 23.27லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். உலக போலியோ தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்  கப்பட்டதை முன்னிட்டு சென்னை ராணிமேரி கல்லூரி  அருகில் சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டரி கிளப் சார்பில் மிதிவண்டி பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.  தமிழக  முதல்வர் திட்டமிட்டபடி, மிகச் சிறப்பாக தமிழ கத்தில்  23 லட்சத்து 27 ஆயிரத்து 907 பேருக்கு சனிக்  கிழமை  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 2வது  தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண் ணிக்கை 14 லட்சத்து 68 ஆயிரத்து 457.

முதல்  தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண்  ணிக்கை 8 லட்சத்து 59 ஆயிரத்து 450. கூடுத லான வகையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத் திக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட வர்கள் 69 சதவிகிதம் பேர். இரண்டாவது தவணை  தடுப்பூசியை 29 சதவிகிதம் பேர் செலுத்திக்கொண் டுள்ளனர். இந்திய அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை சதவிகித அடிப் படையில் எண்ணிக்கை குறைவு என்றாலும், மிக  விரைவில் தேசிய அளவிலான இலக்கை எட்டு வோம்.   திங்கட்கிழமை வழக்கம்போல் தடுப்பூசி முகாம்  கள் இயங்கும். தடுப்பூசிகள் தற்போது கையிருப் பாக 43 லட்சம் அளவுக்கு உள்ளது. இவ்வாறு கூறினார்.

;