tamilnadu

img

காலியாக உள்ள 1403 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் பயிற்சி பெற்றவர்களை நியமித்திடுக... வேலையின்றி காத்திருக்கும் சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை....

சென்னை:
சுகாதாரத்துறையில் காலியாகஉள்ள  1403 சுகாதார ஆய்வாளர்பணியிடங்களில்  பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்றுவேலைவாய்ப்பின்றி காத்திருக் கும் பயிற்சிபெற்ற சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வேலைவாய்ப்பில் லாமல் காத்திருக்கும் பயிற்சி பெற்ற  சுகாதார ஆய்வாளர்கள் சார்பாக மா.சபரி சங்கர் என்பவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:நாங்கள் தமிழக அரசால் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ள சுகாதார ஆய்வாளர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற  2261 சுகாதார ஆய்வாளர் கள் ஆவர். நாங்கள் எங்களுடைய பயிற்சி காலத்தில் கொரோனா முதல் அலையில் தமிழகம் முழுவதும் பயிற்சி சுகாதார ஆய்வாளராக ஏப்ரல்-2020 முதல் நவம்பர்2020 வரை 8 மாதம்  களப்பணி ஆற்றி உள்ளோம்.கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு அன்றைய அரசு 15-06-2020 அன்று 2715 தற்காலிக சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கியது.அதில் 1646 சுகாதார ஆய்வாளர் மட்டுமே பணியமர்த்தப்பட்டு தற்போது வரை வேலை பார்த்து வருகின்றனர்.தற்போது உள்ள  அரசானது சுகாதாரத்துறையில் வெளி ஆதார முறையில் (Outsourcing)  பணியமர்த்துவதை கைவிட்டு தொகுப்பூதியம் (Consolidation) அடிப்படையில் பணியமர்த்த முடிவெடுத்துள்ளது.மேலும் காலியாக உள்ள 1069 தற்காலிக சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் பணியில்உள்ள 1646 தற்காலிக சுகாதாரஆய்வாளர்களை மட்டுமே மாற்ற 30-06-2021 அன்று உத்தரவிட்டுள் ளது. இதனால் இப்பணியினை நம்பி வேலைக்காக காத்திருக்கும் 2,261 சுகாதார ஆய்வாளர்களின் நிலை  கேள்விக்குறியாகியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையைத் தடுக்கும் பொருட்டு அரசானது சுகாதாரத்துறையில்  தற்காலிகமாக மருத்துவர்கள், செவிலியர்கள்,ஆய்வக  நுட்புனர்கள்  மற்றும் இதர சுகாதாரப்பணியாளர்களை பணியமர்த்தியது. ஆனால்  சுகாதார ஆய்வாளர்கள் இதுவரை எவரும் நியமிக்கப்பட வில்லை. கொரோனா இரண்டாவது அலையில்  கிராமப் பகுதி மக்களையே பெருமளவில் தாக்கி உள்ளது. சுகாதார ஆய்வாளர்கள் ஆகிய நாங்கள் கிராம பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து அங்குள்ள மக்களில் கொரோனா அறிகுறி கொண்டவர்களை உடனடியாக பரிசோதனைக்கு அனுப்பு தல், கொரோனா  நோய்த்தொற்று உறுதியானவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுப்புதல்,தொற்று கண்டவரின் உடன் இருந்தவர்களை தனிமைப் படுத்துதல், அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், மாவட்ட எல்லையில் நோய்கண்காணிப்பு பணி செய்தல், அனைத்து கள நிலவரங்களை யும் அறிக்கையாக சமர்ப்பித்தல்போன்றவற்றை மேற்கொள்கிறோம். 2019 ஆம் ஆண்டு வழக்கறிஞர் சூரிய பிரகாசம் டெங்கு நோய்க்கு எதிராக நடவடிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது வரை நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தற்போது அந்த வழக்கில் தமிழகஅரசின் சுகாதாரத்துறை சார்பில்சுகாதாரத்துறை  முதன்மைச் செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் 2715 தற்காலிக  சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் உண்மைநிலையை கண்டறிந்து வெளிக்கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் சுகாதாரத்துறை யில் 334 நிரந்தர மற்றும் 1069 தற்காலிக பணி சேர்த்து மொத்தம் 1403 சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த காலிப்பணியிடங்களில் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பில்லாமல் உள்ளவர்களை நியமனம் செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;