tamilnadu

img

வாய்ப்பு வாசல்

பாரத ஸ்டேட் வங்கியில் 14,191 பணியிடங்கள்

இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பொதுத்துறை வங்கி யான பாரத ஸ்டேட் வங்கி யில்(State Bank of India) நாடு முழுவதும் 14  ஆயிரத்து 191 (456 பின் னடைவுப் பணியிடங்க ளையும் சேர்த்து) Junior Associate பணியிடங்களை நிரப்பப் போகி றார்கள். இதற்கான அறிவிக்கை 17 டிசம்பர் 2024 அன்று வெளி யாகியுள்ளது. 

குறைந்தபட்சம் பட்டதாரி என்பதோடு, பட்டப்படிப்பின் இறுதியாண்டில் பயில்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இரு 
கட்டமாகத் தேர்வுகள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 2005லும், முதன்மைத் தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் 2025லும் நடத்தப்படும். அந்தந்த மாநிலங்களில் உள்ள வட்டார மொழித்தேர்வும் நடக்கும். பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த மொழியைப் பயின்றிருந்தால், வட்டார மொழித்தேர்வு எழுத வேண்டியதில்லை.

எந்த மாநிலத்தில் பணிபுரிய விரும்புகிறாரோ, அதற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு வட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தேர்ச்சி பெற்ற பிறகு, எந்த காரணத்தைக் கொண்டும் மாறு தல் கிடைக்காது. இது குறித்த முழு விபரங்களை https://bank.sbi/ careers/current-openings என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

ரயில்வேயில்  1036 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் பல்வேறு மண்ட லங்களில் முதுநிலை ஆசிரியர்கள், அறிவி யல் மேற்பார்வையாளர், பட்டதாரி ஆசிரி யர்கள், வழக்கறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர், நூலகர், ஆய்வுக்கூட உதவியாளர் உள்ளிட்ட  பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமனம்  செய்வதற்கான அறிவிக்கை வெளியாக வுள்ளது. விண்ணப்பங்களை 07 ஜனவரி 2025  ஆம் தேதி முதல் நிரப்பலாம். விண்ணப்பிப்பதற் கான கடைசி நாள் 06 பிப்ரவரி 2025 ஆகும். 

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி யான கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரயில்வே மண்ட லங்களின் இணையதளங்களில் இது குறித்து  விபரங்கள் உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள்  HYPERLINK “http://www.rrbchennai. gov.in/”www.rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம்.

இந்திய ராணுவ தொழிற்சாலையில்  10/ITI/12 படித்தவர்களுக்கு வேலை

இந்திய ராணுவத்தில் குரூப் சி பணிகளுக்கு 723 காலியிடங்கள் உள்ளன. 

Material assistant, Junior office Assistant, Civil motor Driver,Tele operator, Fireman, Carpenter, Painter, MTS,Tradesman Mate போன்ற பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன.
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு/தொழில் தொடர்பான தேர்வு(Skill Test/Trade test) மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

www.aorecruitment.gov.in. என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20 டிசம்பர் 2024 ஆகும்.

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணி

பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸில் 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புகிறார்கள்.  இது குறித்த முழு விபரங்களை  HYPERLINK “https://www.newindia.co.in/”https://www.newindia.co.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். 

விண்ணப்பிக்கக் கடைசி நாள் 01 ஜனவரி 2025 ஆகும்.

சிஎஸ்ஐஆர்-நெட் தேர்வு

அறிவியல் துறைகளுக்கான நெட் தேர்வை சிஎஸ்ஐஆர்(CSIR -  Council of Scientific & Industrial Research)-யுஜிசி(University Grants Commission) சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதற்கான விண்ணப்பத்தை நிரப்பவும், கூடுதல் விபரங்களைப் பெறவும்  HYPERLINK “https://csirnet.nta.ac.in/”https://csirnet.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிச.30.