tamilnadu

மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் 100 நாள் வேலை.... முதலமைச்சர் உத்தரவிடக் கோரிக்கை....

சென்னை:
தமிழகத்தில் 55 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யக்கூடாது என்று கடந்த அதிமுக அரசு போட்ட உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைவருக்கும் வேலை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் 55 வயதுக்கு மேலுள்ள பணியாளர் களை ஏப்ரல் மாதத்தில் காபந்து அதிமுக அரசு நிறுத்தியது. ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் 19.04.2021 தேதியிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்  “கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கை” எனக் காரணம் கூறியது.

பொருத்தமற்ற உத்தரவு
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராமப்புற ஏழைகளின் பொருளாதாரத்தை 100 நாள் வேலை உறுதித் திட்டம் எவ்வாறு பாதுகாத்தது என்பதை ஊரக வளர்ச்சித் துறை ஆணையரின் அக்கடிதத்தில் பட்டியலிட்டு இருந்தார்.மாறாக, டாஸ்மாக் கடைகளை எல்லாம் தாராளமாக திறந்து வைத்திருந்த வேளையில், கிராமப்புற மாற்றுத்திறனாளிகள் உள் ளிட்ட ஏழைகளின் வாழ்வாதாரத்தை முடக் கும் வகையில் முந்தைய அரசின் அந்த உத்தரவு அமைந்தது. மோசமான அந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி ஏப். 27ல் எமது சங்கம் சார்பில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் கண்டு கொள்ளப்படவில்லை.

வறுமையில் தவிப்பு
முந்தைய அரசின்போது போடப்பட்ட  உத்தரவு தொடர்ந்து நீடிப்பதால், இத்திட் டத்தில் பயன்பெற்று வந்த கிராமப்புற ஏழை மாற்றுத்திறனாளிகள், முதியோர்  பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகி வறுமையால் தவிக்கின்றனர். இக்கூலியை நம்பி வட்டிக்கு வாங்கிய கடன்களை கட்ட முடியாமலும், மருந்து மாத்திரைகள்கூட வாங்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.

மீண்டும் வேலை
எனவே, கிராமப்புற ஏழைகளை பாதிக் கும் வகையில் முந்தைய அரசின்போது ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய முதலமைச் சர் உத்தரவிடக் கேட்டுக்கொள்கிறோம். 55 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 100 நாள் வேலை தொடர்ந்து முழுமையாக வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுகிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
 

;