தமிழ்நாட்டில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும். 7,200 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ள நிலையில் 100 பேருந்துகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்துக்கு 200 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கும்பகோணம் பேருந்து நிலையத்தில் 23 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.