tamilnadu

img

மின்சாரம் துண்டிப்பு... இருளில் மூழ்கிய மாணவிகள் விடுதி.... சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி உச்சக்கட்ட அராஜகம்...

சிதம்பரம்:
சிதம்பரத்தில் ராஜா முத்தையா கல்லூரி நிர்வாகம் உச்சக்கட்ட அராஜகமாக மின் சாரத்தை துண்டித் தால் இருளில் மூழ்கிய மாணவியர் விடுதியில் இயற்கை, உடல் உபாதைக்கு தண்ணீரின்றி பரிதவித்த மாணவிகள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தனர்.

கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி மாணவர்கள் கடந்த 47 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அரசு கண்டு கொள்ளாமல் உள்ளதால் கடந்த 3 தினங்களாக இரவு பகல் என தொடர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்தை நசுக்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையின்றி விடுமுறை அறிவித்து, விடுதிகளையும் காலி செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் போராட்டக் காலத்தில் மாணவர்கள் ஒற்றுமையை குலைக்க முடியாத நிர்வாகம், விடுதிகளில் குடிநீர், உணவு வழங்குவதை நிறுத்தியது.இதையடுத்து போராட்ட மாணவர்கள் சொந்த செலவில் வெளியில் இருந்து உணவை வரவழைத்து உணவருந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்வதறியாத பல்கலைக் கழக நிர்வாகம், விடுதிகளுக்கான மின்சாரத்தை  துண்டித்தது. இதனால் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள பெண்கள் விடுதி இருளில் மூழ்கியது. மேலும், மாணவிகள் தங்களின் இயற்கை உபாதைகள் உடல் ரீதியான உபாதைகளுக்கு அடிப்படை தேவையான தண்ணீரின்றி கடும் அவதிக்கு ஆளாகி தவித்து வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் இந்த அராஜக போக்கை கண்டித்து மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருள் சூழ்ந்த விடுதியில் கையில் மெழுகுவத்தி, செல்போன் விளக்குகளை ஒளிர விட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விதிமுறைகளுக்கு மாறாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் இந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசு இதுகுறித்து மவுனம் காப்பது பெற்றோர்களை கவலையடைய செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் அராஜக போக்கை குறித்து விடுதி மாணவிகள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை தோல்வி
இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் பல்கலைக் கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், மருத்துவ கல்லூரி முதல்வர் மிஸ்ரா, கண்காணிப்பாளர் நிர்மலா உள்ளிட்டவர்கள் போராட்டக் களத்தில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது, மாணவர்கள் போராட் டத்தை கைவிட வேண்டும் என்றும் வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மணி மண்டபம் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து நல்ல முடிவு எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

இதில் திருப்தியளிக்காத மாணவர்கள், தங்கள் தரப்பில் 5 பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாகவும் சென்னையில் அமைச்சரை சந்தித்து நல்ல முடிவை அறிவித்தால் நாங் கள் நிரந்தரமாக போராட்டத்தை கைவிடுகிறோம். அதுவரைக்கும் எங் கள் போராட்டத்தை தொடர்வோம் என்றனர். ஆனால், போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாக எம்எல்ஏ கூறினார். இதனை மாணவர்கள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.இதனைத் தொடர்ந்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மாநில துணைத் தலைவர் புலிகேசி, மாவட்டச் செயலாளர் குலோத்துங் கன் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டகளத்தில் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் அவர்கள் அரசு சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் 14,000 மருத்துவர்களும் ஒரு முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும் என கூறியுள்ளனர்.

;