tamilnadu

img

சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு....

சிதம்பரம்:
தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரியில்  வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 45 நாட்களாக அக்கல்லூரி மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள்.

இந்தநிலையில் கல்லூரி நிர்வாகம் மருத்துவ மாணவர்களை கல்லூரி விடுதி மற்றும் கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டுமென நெருக்கடி கொடுத்து வெளியேற்றினர். இதனை கண்டித்து மாணவர்கள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் விடுதியில் உணவு வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டு விடுதியும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் போராட்டக்களத்தில் கையில் தட்டு ஏந்தி உணவு கேட்டு கோஷங் களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி. ஆறுமுகம் தலைமையில் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் குமரவேல் உள் ளிட்டோர் மாணவர்களின் போராட்டகளத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை அச்சுறுத்தல் கூடாது, மாணவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாணவர்கள் மத்தியில் பேசினார்.இதனைத்தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து மாணவர் களை விடுதியை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடாது என மனு அளித்தனர்.  இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அரசு உரிய முடிவு எடுக்கும் எனவும் அவர் கூறினார்.

;