tamilnadu

img

கோவை வேளாண் பல்கலை.யில் காவி உடையில் வள்ளுவர் படம்... கடும் எதிர்ப்பால் புகைப்படம் மாற்றம்....

கோவை:
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி உடையில் வள்ளுவரின் புகைப்படம் இருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.இதையடுத்து வேளாண் பல்கலைக்கழகம் அந்த புகைப்படத்தை மாற்றியது. 

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள  நூலகத்தில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையையும் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் காவி உடை அணிந்திருந்த படத்தை அகற்றி வேறு படத்தை பொருத்தியது. திருவள்ளுவர் படம் எந்த அடையாளத்தையும் குறிப்பிடாத வகையில்வெள்ளை உடையுடன் சித்தரிக்கப்பட்ட படமே தமிழக அரசால் அங்கீகரிக்கப் பட்டு அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பாஜகவினர் திட்டமிட்டு மத அடையாளத்தை திணிக்கும் முயற்சியாக  திருவள்ளுவர் படத்தை  காவி உடைமற்றும் விபூதியுடன் பதிவிட்டு சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை பதிவிட்ட நிலையில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதை அகற்றினார்.  

இந்நிலையில், கோவைதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் சமீபத்தில் பராமரிப்புபணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது  நூலக நுழைவு வாயிலில்புதிதாக திருவள்ளுவர் படம் பொருத்தப் பட்டுள்ளது. இதில்  திருவள்ளுவர் காவி உடைஅணிந்தவாறு  வைத்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம்,இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. மேலும், போராட்ட அறிவிப்பையும் செய்தது. தமிழக அரசிற்கே தெரியாமல் பல்கலைக்கழக நிர்வாகம் இத்தகைய செயலை செய்வதாக விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து உடனடியாக வியாழனன்று வேளாண்மை பல்கலைக்கழகம் காவி உடை அணிந்திருந்த திருவள்ளுவர் படத்தைஅகற்றிவிட்டு  தமிழக அரசால் அங்கீகரித்த படத்தை வைத்தனர்.

;