tamilnadu

img

ஜன. 10-ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்....

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பாலியல் வழக்கில்தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்யக்கோரி, எதிர்வரும் ஜன.10 ஆம் தேதியன்று பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்துக்கட்சி மற்றும் மாதர் அமைப்பினர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.பொள்ளாச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ஏ.ராதிகா தலைமையில் அனைத்துக் கட்சி மற்றும் மாதர் அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் எஸ்.வாலன்டினா, திமுக கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி நகர செயலாளர் மருத்துவர் வரதராஜன், சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம், காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் பகவதி, கொ.ம.தே கட்சியின் மாவட்டச் செயலாளர் நித்தியானந்தம், விசிகமாவட்ட செயலாளர் ச.பிரபு, தபெதிக வெளியீட்டு செயலாளர் இரா.மனோகரன், மதிமுக மாவட்டச்செயலாளர் குகன்மில் செந்தில், ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர்  கோபால், மஜக கட்சியின் பொறுப்பாளர் முஸ்தபா, மமக பொறுப்பாளர் ஷேக்அப்துல்லா, தமுமுக கலீல் ரகுமான், தமிழ்தேசியவிடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.பாரதி, திவிக யாழ் வெள்ளியங்கிரி உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இரண்டாண்டுகளுக்கு பிறகு தற்போது ஆளும் கட்சியான அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணியில் மேலும் பல அரசியல் பிரமுகர்கள், செல்வாக்கு மிக்கவர்களுக்கு தொடர்பு இருக்கும் என கருதப்படுகிறது. ஆகவே, இந்த பாலியல் கொடூர குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் ஜன.10 ஆம் தேதியன்று பொள்ளாச்சியிலுள்ள காந்தி சிலை முன்பு அனைத்துக் கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்பினர் பங்கேற்கும் பெருந்திரள் ஆர்ப்பா ட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவர் உ.வாசுகி, கொ.ம.தே கட்சியின் நிறுவனர் இ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோரை பங்கேற்கச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

;