tamilnadu

img

கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்பு

கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ் சமீரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தென்காசி ஆட்சியராக பணியாற்றி வந்த மருத்துவர் ஜி.எஸ்.சமீரன்  கோவை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து  ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை பொறுப்பெற்றுக்கொண்டர்.  இதைத்தொடர்ந்து கோவையின் முன்னாள் ஆட்சியர் எஸ்.நாகராஜன் புதிய ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்தார். 
இதையடுத்து  மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால் கோவையில் தினசரி கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பு 4 ஆயிரத்தில் இருந்து 1,500 ஆக குறைந்துள்ளது. 
கோவையில் கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா நோய்த் தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மாநகராட்சியைப் போன்று ஊரகப் பகுதிகளிலும் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

;