tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

செயலிழந்த மலக்குடலை சரி செய்து அரசு மருத்துவமனை சாதனை

பொள்ளாச்சி, ஏப். 15-  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபருக்கு, செயலிழந்திருந்த  மலக்குடலை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை  படைத்துள்ளனர்.. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரஜினி சிங் (40). இவர்  கடந்த மூன்று நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவ திப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட் டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது  குடல் வீங்கி செயலிழந்து மலம் வெளியேறாமல் வயிறு வீங் கியிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை நிபுணர்கள் கார்த்தி கேயன், முருகேசன் மற்றும் சங்கமித்ரா ஆகியோர் தலைமை யிலான மருத்துவக் குழுவும், மயக்க மருத்துவர்கள் ஜெயக் குமார், நவாஸ் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் ஆதி லட்சுமி, தனலட்சுமி ஆகியோரும் இணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த  சிக்கலான அறுவை சிகிச்சையில், நோயாளி ரஜினி சிங்கின்  மலக்குடலில் சுமார் 5 சென்டிமீட்டர் அளவிற்கு துளை  ஏற்பட்டு, வயிற்றில் சீழ் கட்டியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மருத்துவர்கள் உடனடியாக அந்த துளையை சரி செய்து, மலக்குடலை தற்காலிகமாக வயிற்றின் வெளியே வைத்து தைத்தனர். தற்போது நோயாளி நலமுடன் இருப்ப தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து தங்களது உறவினரின் உயிரை காப்பாற் றிய மருத்துவக் குழுவினருக்கு, ரஜினி சிங்கின் உறவி னர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தனியார்  மருத்துவமனையில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை செலவா கக்கூடிய இந்த அறுவை சிகிச்சை, பொள்ளாச்சி அரசு மருத்து வமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டதற்கு சமூக  ஆர்வலர்கள், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா மற் றும் மருத்துவக் குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக உதவித்தொகை வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்

உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும், என  மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் குமராபாளை யம் தாலுகா முதல் மாநாடு, அர்ஜுனன் தலைமையில், பள்ளி பாளையம், ஆவரங்காடு நகராட்சி சமுதாயக்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் அகில இந்திய  தலைவர் எஸ்.நம்புராஜன், மாநிலச் செயலாளர் ராஜேஷ்,  மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் உட்பட பலர்  கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், மாற்றுத்திறனாளிக ளுக்கு 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க வேண்டும். இல வச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்திருக்கும் அனைவருக் கும், உடனே வீட்டுமனை வழங்க வேண்டும். உதவித் தொகைக்கு காத்து கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே கிடைக்க நடடிவக்கை எடுக்க வேண்டும். ஆந்தி ராவைப் போல் உதவித்தொகை வழங்க வேண்டும், என  வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் திரளாக  கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சங்கத்தின் தாலுகா தலைவராக அர்ஜுனன், செய லாளராக அருண்குமார், பொருளாளராக கனகவள்ளி மற்றும்  கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சாலையில் கழன்று ஓடிய அரசுப்பேருந்தின் சக்கரம்: 7 பேர் பணியிடை நீக்கம்

நாமக்கல், ஏப்.15- ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்றி ஓடிய சம்பவத்தில், பேருந்தை முறையாக பரிசோதனை செய்யாத ராசிபுரம் கிளை  மேலாளர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து  நிலையத்திலிருந்து திங்களன்று காலை அரசுப் பேருந்து புறப்பட்டு சேலம் நோக்கி சென்று கொண்டி ருந்தது. பேருந்தை பாலசுந்தரம் என்பவர் இயக்கி யுள்ளார். 20க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். ராசிபுரத்தை அடுத்த வைர ஆஞ்சனேயர் கோவில் எதிரே சென்றபோது, திடீரென பேருந்தின் முன் பக்க இடதுபுற சக்கரம் கழன்று ஓடியது. இதனால்  பேருந்து நிலை தடுமாற, பயணிகள் கூச்சலிட்டனர். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பாலசுந்தரம் உடனடி யாக பேருந்தை நிறுத்தினார். இதுகுறித்து ராசிபுரம்  பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில், பணியாளர்கள் வந்து கழிவுநீர்  ஓடையில் கிடந்த சக்கரத்தை எடுத்து மீண்டும்  பேருந்தில் பொருத்தினர். பயணிகள் மாற்றுபேருந்து  மூலம் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சரி யான நேரத்தில் ஓட்டுநர் திறம்பட செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடா்பாக பணிமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சேலம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்கு நர் ஜோசப் டயஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், சாலையில் கழன்று ஓடிய அந்த பேருந்தின் முன் பக்க சக்கரம் கடந்த மார்ச் 9 ஆம் தேதிதான் சர்வீஸ்  செய்யப்பட்டது. அதன்பின் நடைபெற்ற வாராந்திர  பராமரிப்புப் பணியின்போது சக்கர அசைவுகள் சரி யாக உள்ளதா? என்பதை பரிசோதித்திருந்தால் இச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். எனவே, இந்தப்  பணியை முறையாக மேற்கொள்ளாத தொழில்நுட் பப் பணியாளர்கள் 4 பேர், முறையாக கண்காணிக் காத மேற்பார்வையாளர்கள் 2 பேர், பணிமனை கிளை  மேலாளர் ஆகிய 7 பேரை பணியிடை நீக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தெரி விக்கப்பட்டுள்ளது.