பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மென்பந்து போட்டி, கோவை ஸ்ரீராம கிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடத்தையும், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், கோவை அரசு கலைக் கல்லூரி மூன்றாம் இடத்தையும், சிஎம்எஸ் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றன.