tamilnadu

img

சென்னை சில்க்ஸ் கடைக்கு சீல் - ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் அதிகாரிகள் நடவடிக்கை

கோவை ஒப்பணகார வீதியில் உள்ள சென்னை சில்க் ஜவுளிக் கடையில் பின்புறமாக வாடிக்கையாளர்களை அனுமதித்து விற்பனை செய்ததால் அந்த கடைக்கு  மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 
தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கும் வரும் மே. 24ம் தேதிவரை  நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பெரிய ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், நகைக்கடைகள், தியேட்டர்கள் ஆகியவை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோவை ஒப்பணகார வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்ஸ் நிறுவனம், தனது கடையின்  பின்புறம் உள்ள கதவின் வழியாக வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதித்து வியாபாரம் செய்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று காலை அங்கு ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் கடையில் விற்பனை நடைபெற்று வருவதை உறுதி செய்தனர். இதனையடுத்து இன்று சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு கோவை மாநகராட்சி  அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கொரொனா தொற்றை பரப்பும் விதத்தில் செயல்பட்ட அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

;