அதிமுக பிரமுகரின் மனைவி படுகொலை: ஓட்டுநர் சரண்
கோவை, அக். 28- அதிமுக முன்னாள் மாவட்ட கவுன் சிலருமான கவிசரவணகுமார் என்பவ ரின் மனைவியை ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கொலையைச் செய்த ஓட்டுநர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கோவை, பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவராகவும், அ.தி. மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சில ராகவும் பதவி வகித்தவர் கவிசரவண குமார். இவரது மனைவி 47 வயதான மகேஸ்வரி. இவர்கள் இருவரும் தங்க ளது இரண்டு குழந்தைகளுடன் தாளி யூர் பகுதியில் வசித்து வந்தனர். இவர் களது வீட்டில் சுரேஷ் என்பவர் ஓட்டுந ராகப் பணிபுரிந்து வந்தார். செவ்வாயன்று, காலை வழக்கம் போல கவிசரவணகுமார் வெளியே சென்ற நிலையில், அவரது குழந்தை கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் மகேஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டினுள் நுழைந்த ஓட்டுநர் சுரேஷ், மகேஸ்வரியைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். இக் கொலையை நிகழ்த்திய பின்னர், சுரேஷ் உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். வடவள்ளி போலீசார் உடனடியா கத் தடாகம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடமான தாளி யூருக்கு சென்ற தடாகம் போலீசார், வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மகேஸ்வரியின் சடலத்தைக் கைப் பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சரண டைந்த ஓட்டுநர் சுரேஷிடம், இந்தக் கொடூரக் கொலைக்கான காரணம் குறித்து தடாகம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி கொல்லப்பட்ட இந்த சம்பவம் தாளி யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகு திகளில் பதற்றத்தையும், பரபரப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.