சேலம், செப்.30- ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் கிழக்கு மாநகர குழு சார்பில் அம்மாள் ஏரி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட அம்மாள் ஏரி பகுதியில் அதிகமான ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால், மழை நீர் வடியா மல் ஊருக்குள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடுகள் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனை கண்டித்தும், மாந கராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் உரிய முறையில் கவனம் செலுத்தி சேலம் மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஆக்கிரமிப் பாளர்கள் தங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கமுதல்கட்ட மாக குறியீடுகள் செய்யப்பட்டுள்ளதாக வும். அரசு தரப்பில் கிராம நிர்வாக அலு வலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்களன்று அம்மாள் ஏரி அருகில் இந்தய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் கிழக்கு மாநகர குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சேலம் கிழக்கு மாநகர தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநகர செயலாளர் பெரியசாமி, வீரமணி, ராஜகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மாநகர செயலாளர் பி.ரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.